மூன்றாம் வேற்றுமை எழுவாய் நிலைமொழியாய் நிற்ப, அவ் வெழுவாயாகியநிலைமொழிப்பொருளால் ஆகின்ற செயப்பாட்டு வினைச்சொல் வருமொழியாகவருமிடத்து, வருமொழி முதற்கண் வரும் வல்லினம் பொதுவிதியால் மிக்குமுடிதலே யன்றி, உறழ்ச்சியும் இயல்பும் ஆகும். உயிரீறு மெய்யீறு- என்றஇருவகை நிலைமொழியும் கொள்க. இப்புணர்மொழி மூன்றாம்வேற்றுமைத்தொகை.எ-டு: அராத் தீண்டப்பட்டான், சுறாப் பாயப்பட்டான் – என்றுமிக்கு முடிதலே பெரும்பான்மை.பேய்கோட்பட்டான், பேய்க்கோட்பட்டான்; உறழ்ச்சிபுலிகோட்பட்டான், புலிக்கோட்பட்டான் }பேய்பிடிக்கப்பட்டான், புலிகடிக்கப்பட்டான்இயல்பு.கோட்படுதல் என்பது மூன்றாம் வேற்றுமை எழுவாயால் ஒரு சாத்தற்குஏற்பட்ட நிலை. கொள்ளுதல் மூன்றாம் வேற்றுமை எழுவாயின் தொழில்.தம் தொழில்: சாத்தன் உண்டான் என்புழி, சாத்தனாகிய எழுவாயின்தொழில்.தம்மினாகிய தொழில் : சாத்தன் புலி கடிக்கப்பட்டான் என்புழி, ஓர்எழுவாயால் சாத்தனுக்கு ஏற்பட்ட தொழில்; அஃதாவது கடிக்கப்படுதல். (நன்.256)