எ-டு : ‘கோவ ளர்ப்பன கோநக ரங்களேகோவ ளர்ப்பன கோநக ரங்களேமேவ ளக்கர் வியன்திரை வேலைசூழ்கோவ ளர்ப்பன கோநக ரங்களே’.கோ – பெரிய, ஒளி, அரசன், மேம்பாடு, பூமி என்ற பொருள் களிலும்,கோநகரங்கள் – மேம்பட்ட ஊர்கள், இறைவனுடைய ஊர்கள் என்றபொருள்களிலும் வந்துள்ளன. கோந(ன) கரங்கள் – அரசன் கைகள்.பெரிய நகரங்கள் ஒளியை மிகுப்பன; அரசன் பெருக்குவன இறைவன்கோயில்களே; கடல் தனது அலையோடும் கரை யோடும் சூழ்ந்திருக்கும்நிலவுலகத்தைக் காப்பன அரசனுடைய கைகளே என்று பொருள்படும் இப்பாடற்கண்,முதலாம் அடியே இரண்டாம் நான்காம் அடியாக மடக்கி வந்தவாறு. (தண்டி.96)