நான்கடிச் செய்யுளில் மூன்றாம் அடியின் தொடக்கத்தில் முதற்சீர்மடக்கி (இரண்டாம் சீராகவும்) வருவது.எ-டு : ‘தேங்கானல் முத்(து) அலைக்கும் தில்லைப் பெருந்தகைக்குஓங்காரத் துட்பொருளாம் ஒண்சுடர்க்கு – நீங்கா மருளா மருளா தரித்துரைக்கும் மாற்றம்பொருளாம் புனைமாலை ஆம்.’மருளாம் – ஆசையாகிய; மருள் – பாசம்“கானலில் முத்து அலைக்கும் தில்லையில் பெருந்தகையாய், ஓங்காரத்துஉட்பொருளாம் சோதிவடிவாகிய சிவபெரு மானுக்கு, நீங்காத ஆசையாகியபாசத்தினை மேற்கொண்டு அடியார்கள் கூறும் சொற்கள் மேம்பட்ட பொருள்களும்அணியும் மாலைகளும் ஆம்” என்று பொருள் படும் இப்பாடற்கண், மூன்றாமடிஆதியில் ‘மருளா’ என்ற சீர் மடக்கி வந்தவாறு. (தண்டி. 95)