மூன்றாமடியொடு நான்காமடிஆதிமடக்கு

எ-டு : ‘ஆயிரம்பெற் றான் ஒருமூன் றைந்துற்றான் ஆதியர்க்கு,மேய முதல்வனெனும் மெய்வேதம் – பாய் திரைப்பால் ஆழியா ன் ஆழியான் அஞ்சிறைப்புட் பாகனெனும் கோழியான் கோழியான் கோ’.கண் ஆயிரம் பெற்றான் – இந்திரன்கண் மூன்று பெற்றான் – சிவன்கண் மூன்றும் ஐந்தும் உற்றான் – பிரமன்.பால் ஆழியான் – பாற்கடலையுடையவன்; ஆழியான் – சக்கராயுதத்தையுடையவன்; கோழியான் – உறையூரிலிருப் பவன், கோழிக்கொடியை உயர்த்தமுருகன். கோ – கண்.பாற்கடலை யுடையவனும் சக்கராயுதம் ஏந்தியவனும் கருடனை ஊர்பவனும்உறையூரில் உகந்திருப்பவனும் ஆகிய திருமால், கோழிக்கொடியையுடையமுருகன், ஆயிரங் கண்ணான் ஆகிய இந்திரன், முக்கண்ணனாகிய சிவபெரு மான்,எண்கண்ணனாகிய பிரமன் ஆகிய எல்லோருக்கும் முதல்வன் என்ப.ஆழியான், ஆழியான் – கோழியான், கோழியான் – மூன்றாமடி நான்காமடி ஆதிமடக்கு. (மா. அ. பாடல் 632)