வெவ்வேறு சொற்கள் நான்கடியிலும் இறுதியில் மடக்கி வருவது.எ-டு : மாலை அருளாது வஞ்சியான் வஞ்சியான்வேலை அமரர் கடைவேலை – வேலைவளையார் திரைமேல் வருமன்ன மன்னஇளையா ளிவளை வளை.வஞ்சியான், வேலை, மன்ன, வளை என்ற சொற்கள் முறையே நான்கடிகளிலும்ஈற்றில் மடக்கியவாறு.அமரர் கடைவேலை, அவ்வேலைத் திரைமேல் வரும் அன்னம் அன்ன இவளைஅருளாது, வஞ்சியான், இவள் வளைகளை வஞ்சியான் – எனப் பிரித்துப் பொருள்செய்க.பண்டு தேவர்கள் பாற்கடல் கடைந்தபோது, அக்கடலின் வளைகளைக்கொழித்துவரும் அலைகளின்மேல் தோன்றிய அன்னம் போன்ற திருமகளை ஒத்த இவளை,வஞ்சிநகரை ஆளும் வேந்தன், தன் மாலையைத் தாராது வளைகளைக் கவர்ந்துவஞ்சிக்க மாட்டான்” எனத் தாயர் ஆற்றியவாறு கூறும் இப்பாடற்கண், முற்றுஇறுதி மடக்கு வந்தவாறு. (தண்டி. 95)