முற்று இடை மடக்கு

பாடலின் நான்கடிகளிலும் ஒவ்வோரடி இடையிலும் ஒரே சீர் மடக்கி(வெவ்வேறு பொருள்பட) வருதல்.எ-டு : ‘பரவி நாடொறும் படியவாம் பல்புகழ் பரப்பும்இரவி சீறிய படியவாம் பரிஎரி கவரவிரவி மான்பயில் படியவாம் வேய்தலை பிணங்கும்அருவி வாரணம் படியவாம் புலர்பணை மருதம்!’படி அவாம், படிய வாம், படிய ஆம், படிய ஆம் என்று பிரித்துப் பொருள்செய்க. (உலகினர் விரும்பும், படியுமாறு தாவிச் செல்லும், தன்மையஆகும், படிந்து கலக்க ஆம் (-நீர்) – எனமுறையே பொருள் அமையும்)உலகினர் நாள்தோறும் போற்றி விரும்பும் பல புகழ்களைப் பரப்புகின்றசூரியகுலத்துச் சோழமன்னனால் கோபிக்கப் பட்ட நாடுகள், படியுமாறு தாவிச்செல்லும் விரைந்த செலவினை யுடைய நெருப்புக் கவரவே, தம்முள் விரவி,மான்கள் பயிலத்தக்க தன்மையுடைய முல்லை நிலங்கள் ஆம்; அருவிநீர் போன்றுதெளிந்த குளங்களில் அவன் யானைகள் படிந்து கலக்கவே, முன்புவயல்களையுடையவாயிருந்த அம் மருதநிலங்கள் இதுபோது நீர் வற்றிமூங்கில்கள் தம்முள் பிணங்கிச் செறிந்திருக்கின்ற வறண்ட பாலைநிலம்ஆம்.இவ்வாறு நான்கடியிலும், சொற்றொடர் பல இடையிட்டு வர, இடையே மடக்குவந்தவாறு. இதில் பிறிதொரு வகை வருமாறு.எ-டு : ‘மனமேங் குழைய குழை யவாய் மாந்தர்இனநீங் கரிய கரிய – புனைவதனத்துள் வாவி வாவி க் கயலொக்கும் என் உள்ளம்கள் வாள வாள வாங் கண்.’ஒவ்வோரடியிலும் இடையே அசையோ சீரோ மடக்கி வருவதும் முற்றுஇடைமடக்காம்.என் உள்ளம் கள்வாளுடைய வாள் அவாம் கண், மனம் ஏங்கு உழைய, குழைஅவாய், மாந்தர் இனம் நீங்க அரிய, கரிய, வதனத்துள் வாவி, வாவிக் கயல்ஒக்கும் – என்று பொருள் செய்யப்படும்.“என் மனத்தைக் களவு கொண்ட தலைவியின் வாளை யொத்த கண்கள் என் மனத்தைஏங்க வைக்கும் மான்பார்வை யொடு, காதணி வரை நீண்டு, கண்டவர் நீங்கமனமில்லாமை செய்தலுடையவாய், கரியனவாய், முகத்தில் உலாவி, குளத்திலுள்ள கயல்மீன்களை ஒத்துள்ளன” என்று தலைவன் தலைவியின் கண்களைநயந்துரைத்த இப்பாட்டின்கண், குழைய, குழைய – கரிய, கரிய – வாவி, வாவி- வாள, வாள – என்பன நான்கடி இடைமடக்காக வந்தவாறு.(தண்டி. 95 உரை)