முற்று இடையிறுதி இடையிட்ட மடக்கு

ஒரு பாடலின் நான்கடிகளிலும் ஒரே சொல் இடையிலும் இறுதியிலும்இடையிட்டு மடக்கி வந்து பொருள் தருமாறு அமையும் மடக்கு வகை.எ-டு : ‘வா மான மான மழைபோல்மத மான மான நா மான மான நகமாழக மான மான தீ மான மான வர் புகுதாத்திற மான மான கா மான மான கவின்கான்கனல் மான மான .’வாம் மான மான; மழைபோல் மத மானம் (அம் சாரியை) ஆன; நாம் ஆன மான நகம்ஆழ் அகம் மானம் (அம் சாரியை) ஆன; தீம் (ஐகாரம் கெட்டது) ஆன; மானவர்புகுதாத் திறமான ஆன; கா மான மான கவின் கான் கனல் மானம் ஆன – என்றுபிரித்துப் பொருள் செய்யப்படும். கவின் கான் : எழுவாய்.“கவின் கானங்கள், தாவிச் செல்லும் மான்களினுடைய பெருமையையுடைய;மேகம் போன்ற மதயானைகளை உடையன; அச்சம் தரும் விலங்குகளுடைய நகங்கள்ஆழ்ந்து கிழிக்கும் மார்பினை மான்கள் உடையவாயின (-அத்தகைய மான்கள்பயில்வன) ; தீமையே வடிவமாயின; மக்கள் உள்ளே நுழையாத தன்மையுடையன ஆயின.சோலைகளை ஒப்ப மிக்க அழகுடைய அக்காடுகள் (இதுபோது வேனிலால்) நெருப்புவடிவினையுடைய ஆயின” என்று பொருள்படும் இப்பாடற்கண், ‘மான்’ என்ற சொல்இடையிடாதும் இடை யிட்டும் பாட்டின் இடையிலும் இறுதியிலும்மடக்கியவாறு. (தண்டி. 95 உரை)இம்மடக்கில் பிறிதொருவகை வருமாறு :‘நான்கடிகளிலும் இடைச்சீரும் இறுதிச்சீரும் மடக்கிவரும் மடக்கும்சீரின் எழுத்துக்கள் ஒவ்வோரடியிலும் வேறாக இருக்கலாம்.எ-டு : ‘மாறர் குருகூர் குருகூர் வடி வேல வேல நாறு மளகத் தளக த் துணை வீகை யீகை யாறி னகலா தகலாத தாமாக மாக நீற னிலவா னிலவா நினைத் தேக லேகல்’மாறர் குருகு ஊர் குருகூர் வடிவேல! ஏலம் நாறும் அளகத்தள் அகத்துள்நைவு ஈகை ஈகையா(ற்)றின் அகலா. தகலாததாம். ஆகம் மாகம் நீறு அல் நிலவால்நிலவா. நினைத்தே கல் ஏகல் -எனப் பிரித்துப் பொருள் செய்க.கற்பிடைத் தலைவன்பிரிவால் தலைவிக்கு நிகழக்கூடிய ஆற்றாமையைக்கூறித் தோழி தலைவனைச் செலவழுங் குவித்தது இது.“சடகோபருடைய, சங்குகள் தவழப்பெற்ற, குருகூரிலுள்ள கூரிய வேலைஏந்திய தலைவ! ஏலம் கமழும் கூந்தலையுடைய தலைவியது மனத்துயர், பொன்னைத்தேடித்தரும் நெறியால் நீங்காது. நின் பிரிவு தகுவதாகாது. இவள் மேனி,வானம் நீறாகும்படி இரவில் எழும் நிலவினால், அழகுகள் நிலவமாட்டா (-அழகுகெடும்). இதனை நினைத்தே கற்கள் நிறைந்த கடங்களின் வழியே பொருள் தேடச்செல்லுதலை நீக்குக” என்று பொருள்படும் இப்பாடற்கண், அடிதோறும்வெவ்வேறு சீர்கள் இடையும் இறுதியும் மடக்கி வந்தவாறு. (மா. அ.பாடல். 714)