நான்கடியும் முதலில் மடக்கி வரும் பாடல்.எ-டு : ‘ வரைய வரைய சுரம்சென்றார் மாற்றம் புரைய புரைய எனப் பொன்னே! – உரையல் நனைய நனைய தொடைநம்மை வேய்வர் வினையர் வினையர் விரைந்து.’வரைய – களவொழுக்கத்தை நீக்க, மலைகளையுடைய;புரைய – மேம்பட்டவை, குற்றமுடையவை;நனைய – மதுவினையுடைய, குளிர்ச்சியினையுடைய;வினையர் – வினையில் வல்ல தலைவர், வினையை முடிப்பர் – எனப் பொருள்செய்க.“நீக்கத்தக்க களவொழுக்கத்தை நீக்க, (வரைவிற்கு வேண்டும் பொருள்தேடிவர) மலைகளையுடைய சுரம் கடந்து சென்ற தலைவருடைய மேம்பட்ட சொற்கள்குற்றமுடையன என்று இதுபோது சொல்லற்க! பொன் போன்றவளே! மதுவினை யுடையகுளிர்ச்சியையுடைய மாலையை, எடுத்த செயலைச் செய்து முடிக்கவல்ல நம்தலைவர் தம் வினையை முடித்தவ ராய் விரைந்து வந்து, நமக்குச்சூட்டுவார்” என்று கூறித் தோழி தலைவியைப் பிரிவிடை ஆற்றுவித்தஇப்பாடற்கண், நான்கடியும் முதற்கண் மடக்கியவாறு. (தண்டி. 95)