முற்று ஆதி இறுதி மடக்கு

எ-டு : ‘ நிரையா நிரையா மணிபோல்நிறை கோடல்கோடல் வரையா வரையா மிருள்முன்வரு மாலைமாலை விரையா விரையா எழுமின்ஒளிர் மேகமேகம் உரையா உரையா ரினும்ஒல்லன முல்லைமுல்லை .’“கோடல்! நிரையா ஆநிரை மணிபோல் நிறை கோடல், வரையா அரை யாம இருள்முன் வரும் மாலை மாலை, விரையா, இரையா மின் ஒளிர் மேகம் எழும், முல்லைமுல்லை, ஏகம் உரையா உரையாரினும் ஒல்லன.” – எனப் பிரித்துப் பொருள்செய்யப்படும். யாமிருள்: அகரம் தொகுத்தல்.“காந்தளே! வரிசையாக வருகின்ற பசுக்கூட்டங்களின் மணி ஓசையைப் போலஎங்கள் நிறையைக் கவராதே. அளவிட முடியாத அரையாம இருளுக்கு முன்வரும்மயக்கம் தரும் மாலைக்காலத்தில், விரைந்து ஒலித்துக்கொண்டு மின்ன லாகியஒளியைத் தரும் மேகங்களும் எழும். ஒன்றும் உரை யாத புகழாளராகியதலைவரினும், முல்லைநிலத்து முல்லைக்கொடிகளும் பகையாயின” எனக்கார்ப்பருவ மாலைக் காலத்துத் தலைவி தலைவன் பிரிவால் வருந்திக் கூறியஇப்பாடற்கண், அடிதோறும் முதலும் இறுதியும் மடக்கியமையால், இதுமுதலிறுதி முற்று மடக்கு ஆம். (தண்டி. 95)