எ-டு : ‘ கொண்டல் கொண்டலர் பொழில்தொறும் பண்ணையாய் பண்ணை யா யத்துள்ளார் வண்டல் வண்டலர் தாதுகொண் டியற்றலின்வரு மண மண ல்முன்றில் கண்டல் கண்டக மகிழ்செய ஓதிமம்கலந் துறை துறை வெள்ளம் மண்டல் மண்டல முழுதுடன் வளைதரு வளைதரு மணிவேலை.’கொண்டல் கொண்டு அலர், பண்ணினை ஆயும் பண்ணை, வண்டல் வண்டு அலர்தாது, கண்டல் கண்டு, கலந்து உறை துறை, மண்டல் மண்தலம், வளைதரு வளை தரு- எனப் பிரித்துப் பொருள் செய்க.“உலகம் முழுவதையும் சூழ்ந்திருக்கும் சங்குகளைக் கொழிக் கும் அழகியகடலே! கீழ்க்காற்றைக்கொண்டு பூக்கின்ற சோலைகள்தொறும், இசையை ஆராயும்விளையாடற் சிறுமியர் சிற்றிலை வண்டுகளால் வெளிப்படும் மகரந்தத்தூள்களைக் கொண்டு இயற்றுதலின் மணம் வீசவும், மணற் பகுதியிலே தாழையைக்கண்டு மனம் மகிழ் கூரவும், அன்னங்கள் கூட்டமாகத் தங்கியிருக்கும்நீர்த்துறையில் வெள்ளத்தைக் கொண்டு ஏறாதொழிவாயாக!” எனச் சிறுமியர்விளையாடல் கண்டு மகிழும் தாயர் கடலைப் பரவிய இப்பாடற் கண், நான்குஅடிகளிலும் முதலிலும் இடையிலும் இடை யிட்டு மடக்கியவாறு. (தண்டி. 95உரை)