முற்று ஆதி இடையிட்ட மடக்கு

எ-டு : ‘ தோடு கொண்டளி முரன்றெழக் குடைபவர் குழல்சேர்ந்த தோடு கொண்டதே மலர்சுமந் தகில்கமழ்ந் தவர்தம் தோடு தைந்தசெஞ் சாந்தணி திரண்முலை இடைதோய்ந் தோடு தண்புனல் நித்திலம் துறைதொறும் சொரியும்.’தோடு கொண்டு – கூட்டம் ;தோடு கொண்ட – பூவின் இதழ்;தோள் துதைந்த, (தோய்ந்து) ஓடு தண்புனல் – எனப் பிரித்துப் பொருள்செய்க.“கூட்டமாக வண்டுகள் ஒலித்தெழ, நீராடுவார் கூந்தலில் பொருந்திய இதழ்கொண்ட இனிய மலரைச் சுமந்து, அகில் மணந்து, அம்மகளிருடைய தோள்களில்பூசிய செஞ்சந்தனம் தம்மிடத்துப் பூசப்பட்ட திரண்ட முலையிடையே தோய்ந்துஓடும் குளிர்புனல் முத்துக்களை நீர்த்துறைதோறும் குவிக் கும்” என்றபொருளமைந்த இப்பாடற்கண், தோடு என்ற சொல், பாடலின் நான்கடிகளிலும்பிறசொற்றொடர்கள் இடையிட்டு வர, அடிமுதற்கண் மடக்கி வந்தமை காணப்படும். (தண்டி. 95 உரை.)