ஒரே அடி நான்கடியுமாக வரும் மடக்கு; இந்நான்கடி மடக்கினை ஏகபாதம்எனவும் கூறுப. (திருஞானசம்பந்தர் அருளிய முதல்திருமுறைக்கண்(பண்முறைத் தேவாரம்) 127 ஆம் பதிகம் பன்னிரண்டு பாசுரங்களும்இவ்வகையின.எ-டு : ‘வான கந்தரு மிசைய வாயினவான கந்தரு மிசைய வாயினவான கந்தரு மிசைய வாயினவான கந்தரு மிசைய வாயின’வான் அகம் தரும் இசைய ஆயின, வானகம் தரும் இசை அவாயின; வானகம் தரும்இசைய ஆயின, வான் நகம் தரு மிசைய ஆயின – எனப் பிரித்து பொருள்காண்க.வானகம் – ஆகாயம், விண்ணுலகம், பெரிய மலை;இசை – ஓசை, எழுச்சி, புகழ்.மேகங்கள் கடலிடத்தில் கொடுக்கும் ஓசையை உடையன- வாய் ஆகாயத்தைக்கைப்பற்றிக் கொள்ளும் எழுச்சியை விரும்பின; விண்ணுலகத்தில் ஓங்கும்புகழுடையனவாகிய பெரிய மலைகள் மேலிடத்தில் மரங்களைக் கொண்டுள்ளன. மிசை- மேலிடம். (தண்டி. 96 உரை)