ஒடு என்ற மூன்றனுருபு, ஆறனுருபு, ஏழு எண்ணும் இயல்பு எண்ணுப்பெயரும் ஒரு இரு – என்றாற்போலத் திரிந்த எண்ணுப் பெயரும், முற்றுகரஈற்று வினைப்பகுதி (அடு, பெறு- போல்வன), அது இது உது என்றசுட்டுப்பெயர் – ஆகியவற்றின் ஈற்று முற்றுகரம் வன்கணம் வரினும்இயல்பாகப் புணரும்.எ-டு : சாத்தனொடு சென்றான் – மூன்றனுருபுஎனது தலை – ஆறனுருபுஏழு கடல் – இயல்பு எண்ணுப்பெயர்ஒருகல், இருசொல் – திரிந்த எண்ணுப்பெயர்அடுகளிறு, பெறுபொருள் – முற்றுகர ஈற்று வினைப் பகுதிஅது சென்றது, இது கண்டான் – ஒருமைச் சுட்டுப் பெயர்.இவை இயல்பாகப் புணர்ந்தன.உதுகாண், உதுக்காண் – என இயல்பாயும் விகாரமாயும் வருவன அருகியேகாணப்படுகின்றன. ‘உதுக்காண்’ என்பது உங்கே என்ற பொருளில்வரும் ஒட்டிநின்ற இடைச்சொல் என்பாருமுளர். ‘உவக்காண்’ என்பதும் உங்கே என்றுபொருள் படும் ஒட்டி நின்ற இடைச்சொல் (குறள் 1185 பரி.) (நன். 179)