முற்றுகரம் கெடுதல்

நிலைமொழியீற்றில் நிற்கும் முற்றியலுகரம் வருமொழி முதற் கண் உயிர்வருவழிக் கெடுதலும் உண்டு. அல்வழி வேற்றுமை – என இருவழியும்கொள்க.எ-டு: உயர்வு + இனிது= உயர்வினிது; கதவு + அடைத்தான் = கதவடைத்தான்(நன். 164)