அது இது உது – என்பன அன்சாரியையொடு பொருந்தும்வழி, உகரம் கெட, அதன்இதன் உதன் – எனவரும். அவை இன்சாரியையொடு புணரும்வழியும் உகரம் கெட,அதின் இதின் உதின் – என வரும். (தொ. எ. 176 நச். உரை)ஆறு என்பது அறு என நின்றவழி, வருமொழியாக ‘ஆயிரம்’ வரின், அறுஎன்பதன் உகரம் கெட, அற் + ஆயிரம் = அறாயிரம் – என முடியும். (469)சுட்டுமுதல்உகரமே அன்றிப் பிற உகரமும் உயிர் வருவழிக்கெடுதலுமுண்டு. கதவழகியது, களவழகியது, கனவழகியது- என்பனவற்றின்கண்இறுதி உகரம் கெட நின்ற ஒற்றின்மேல் வருமொழி முதல் அகரம் ஏறிமுடிந்தவாறு, (176 நச்.)எல்லாம் என்பது வற்றும் உருபும் பெற்று ஈற்றில் உம்மை பெறுவழி,எல்லாவற்றையும்- எல்லாவற்றொடும் – என வரும். ‘ஒடு’ என்பதனோடு ‘உம்’சேருமிடத்து, ஒடுவின் உகரம் கெட ‘ஒடும்’ என உம்மொடு புணரும். (189நச்.)அது +அன்று, இது+அன்று, உது+ அன்று, அதன்று, இதன்று, உதன்று – எனஉகரம் கெட்டு நின்ற தகர ஒற்றோடு உயிர் புணரும். (258 நச்.)