முற்றாய்தம்

தனக்குரிய அரைமாத்திரையைக் குறையாமல் பெறும் ஆய்தம் முற்றாய்தமாம்.அது தனக்கு முன் குற்றெழுத்தைக் கொண்டு, தனக்குப் பின்னர்ப்பெரும்பான்மையும் கு சு டு து பு று – என்ற ஆறெழுத்துக்களுள் ஒன்றுபெற்று மொழியின் இடையில் நிகழும்.அஃகு, கஃசு, ஒன்பஃது – முதலாக ஈற்று வல்லின வகையால் வரும்முற்றாய்தம் ஆறாம். (குற்றியலுகரமே அன்றி வல்லினப் புள்ளியை ஊர்ந்துபிற உயிர் வரினும் அஃது ஆய்தத்தை அடுத்துவரும் உயிர்மெய்யாம். எ-டு:பஃறி)அவ்+ கடிய = அஃகடிய; அ +கான் = அஃகான் – எனப் புணர்ச்சி வகையான்வரும் முற்றாய்தம் ஒன்றாம்.இலகு – இலஃஃகு, விலகி – விலஃஃகி – எனச் செய்யுள் விகாரத் தால்(விரித்தல்) வரும் முற்றாய்தம் ஒன்றாம்.இவ்வாற்றால் முற்றாய்தம் எட்டு ஆதல் அறியப்படும். (நன். 90உரை)