முருகன் பூண்டி

திருமுருகன் பூண்டி என. கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. சுந்தரர் பாடல் பெற்ற தலம் இது. முருகப் பெருமான் வழிபட்ட தலம் எனவும், மாதவி வனம் என மற் றொரு பெயர் உண்டெனவும் அறிகின்றோம். மாதவிக் கொடிகள் நிறைந்தமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம். சிவபெருமான் கோயில் கொண்ட தலம் என்ற நிலையில் மேற்குறித்த புராணக் கருத்தின் அடிப்படையில் முருகன் பூண்டி எனச் சுட்டப்பட்டு இருக்கலாம் எனினும் பூண்டி என்பது என்ன என்பதை நோக்க, ஊருடன், தோட்டம் என்ற பொருளையும் தமிழ் லெக்ஸிகன் தருகிறது. எனவே தோட்டங்கள் மிகுந்த நிலையில் இப்பெயர் அமைந்திருக்கலாம். முடுகு நாறிய வடுகர் வாழ், முருகன் பூண்டி மாநகர் சுந்தரர் இதனைச் சுட்டும் நிலையில், (49) இது ஒரு பெரிய நகரமாகத் திகழ்ந்தது என்பதையுணர இயலுகிறது. சேக்கிழா ரும் இதனை உறுதிப்படுத்தும் நிலையில், ஓரூரும் திருமுருகன் பூண்டி எனச் சுட்டுகின்றார் (கழற்-164).