முரண் என்ற தொழிற்பெயர் ஏனைய தொழிற்பெயர் போல உகரச் சாரியையும்வருமொழி வன்கணமாயின் வல்லெழுத்து மிகுதலும் பெறாது, பொதுவிதிப்படிஅல்வழிக்கண் திரியாது முடிந்த இயல்பின்கண்ணும், வேற்றுமைக்கண்திரிந்து முடிந்த இயல்பின்கண்ணும் நிலைபெற்றுப் புணரும்.எ-டு : முரண்கடிது, ஞெகிழ்ந்தது, யாது, இழிந்தது – அல்வழிக்கண்இயல்பு. முரட்கடுமை, முரண் ஞெகிழ்ச்சி, முரண்வலிமை, முரணடைவு – எனவேற்றுமைக்கண் வன்கணம் வரின் ணகரம் டகர மாகத் திரிந்தும், ஏனையகணங்கள் வரின் இயல்பாக வும் புணர்ந்தது.முரண் + நீட்சி = முரணீட்சி – என வருமொழி முதல் நகரம்திரிந்தவழி நிலைமொழியீற்று ணகரம் கெட்டது. (தொ. எ. 150 நச்.)முரண் + கடுமை = முரண்கடுமை, முரட்கடுமை. அரண்+ கடுமை =அரண்கடுமை, அரட்கடுமை -என்ற உறழ்ச்சி முடிவும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் உண்டு.(தொ.எ. 309 நச்.உரை)