சேரமான் பெருஞ் சோற்று உதியன் சேரலாதனைப் பாடிய முடிநாகராயர் என்னும் சங்க காலப் புலவர் முரஞ்சியூரைச் சேர்ந்தவர். (புறம். 2). பாறை என்னும் பொருளுடைய முரஞ்சு என்னும் சொல் அடியாகப் பிறந்த ஊர்ப்பெயர் முரஞ்சியூர் என்பது. பாறைப் பாங்கான நில அமைப்பைக் கொண்ட பகுதியில் அமைந்த ஊராக இருந்து முரஞ்சியூர் என்று பெயர் பெற்று இருக்கலாம்.