மிறைக்கவி வகைகளுள் ஒன்று.பாடல்போ த வா ன து வா த ராமா த வா த ண வா த நாநா த வா ண த வா ர வாவே த வா ன து வா ர காமுதலடி – நான்கடிகளையும், இம்முறையே நெடுவார் குறுவார்களாகப்போக்கிக் காண்க.பதவுரை -போத – ஞானவானே!வானது ஆதரா – வானவர் ஆதரிக்கப்பட்டவனே!மாதவா – திருமகள் காந்தனே!நா தணவாத நாத – நாவை விட்டு நீங்காத என் நாதனே!தவா அரவா – அழிவில்லாத அராவை யுடையவனே!வான வேத துவார கா (எனச் சொல் மாற்றுக) – பரமபதமிட மாக நின்றும்பூமியில் வருதற்குப் பெருமை யுடைய வேதத்தை வாயிலாக உடையோனே! என்னைக்காப்பாயாக! (மா. அ. 284 உரை)