மூன்று புள்ளி வடிவிற்றாய ஆய்தம். (தொ. எ.2. இள., நச். உரை)குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் – என்ற புள்ளி பெறும்எழுத்துக்கள் மூன்றும். (சூ.வி.பக். 26; தொ.பொ. (சூ. 665 : 6) பக்.735 பேரா.) (எ.ஆ.பக். 13; எ.கு. பக். 10,11)“ஆய்தம் என்று ஓசைதான் அடுப்புக்கூட்டுப் போல மூன்று புள்ளிவடிவிற்று” என்பது உணர்த்துதற்கு ‘ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்’என்றார். இதற்கு வடிவு கூறினார், ஏனை ஒற்றுக்கள் போல உயிரேறாதுஓசைவிகாரமாய் நிற்பதொன்று ஆதலின். இதனைப் புள்ளி வடிவிற்று எனவே, ஏனையஎழுத்துக்கள் எல்லாம் வரிவடிவின ஆதல் பெறப்படும். (தொ.எ. 2 நச்.உரை)