முன் என்ற சொல் பெயராகவும் ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணர நின்றஇடைச்சொல்லாகவும், குறிப்பு வினை யெச்ச ஈறாகவும் வரும். அச்சொல்வன்கணம் வரின் இயல் பாகவும் ஈற்று னகரம்திரிந்தும், ஏனைய கணங்கள்வரின் இயல்பாகவும் புணரும்.எ-டு : முன் கொண்டான், முற் கொண்டான்; முன் ஞான் றான், முன்வந்தான். வன்கணம்வரின் திரிதலே பெரும்பான்மை. உயிர்வரின்,தனிக்குறில்முன் ஒற்றாகிய நிலைமொழி னகரம் இரட்டும். முன் + அடைந்தான்=முன்னடைந்தான். (தொ. எ. 333 நச்.)