முன் என்ற நிலைமொழியை அடுத்து இல் என்ற வருமொழி புணருமிடத்து,இடையில் னகரம் தனிக்குறில் முன் ஒற்றாக இரட்டி முன்+ன்+இல்=முன்னில்என வருதலே முறை. அதனைவிடுத்து நிலைமொழியீற்று னகரஒற்றை அடுத்து அதன்இனமாகிய றகரஒற்று வந்து சேர, முன்+ற்+இல் = முன்றில் என வருதல்இலக்கணத்தொடு பொருந்திய மரூஉமுடி பாம். இல்லத்தினது முன்னிடம்(முற்றம்) என்று பொருள் படும் இச்சொல், இல்+முன்= இன்முன்- என முறையேபுணர்ந்து வாராமல் முன்பின் நிலைமாறி முன்றில் என்று வந்தமைமரூஉவின்பாற்படும். இங்ஙனம் முன்பின் தொக்கன வற்றைப் பிற்காலத்தார்இலக்கணப் போலி என்பர். (தொ.எ. 355 நச். உரை)இது கடைக்கண், என்றாற்போல வரும் மரூஉமுடிபு போலன்றி, முன்னில் எனஒற்று இரட்டி முடியற்பாலது, இரு மொழிக்கும் இயல்பு இலதோர் ஒற்றுமிக்கு முடிந்த மரூஉமுடிபு. (னகரத்தோடு இயையுடையது ற்.) (356 இள.உரை)