முன்னிலை மொழிக்கு முற்றத் தோன்றாதன

முன்னிலை மொழியாவது முன்னிலைவினை. முன்நின்றான் தொழில்உணர்த்துவனவும் முன்நின்றானைத் தொழிற் படுத்துவனவும் – எனமுன்னிலைவினை இரு வகைத்து. முன்நின் றானைத் தொழிற்படுத்துவனவற்றைத்தெளிவு கருதி ‘ஏவல் வினை’ என்று கூறலாம். இவ்வேவல் வினை ஒருமைக்குஎல்லா ஈற்று வினைப்பகுதிகளும் பயன்படலாம்;என்றாலும் ஒள என்னும்உயிரீறு, ஞ் ந் ம் வ் – என்னும் புள்ளியீறு, குற்றிய லுகர ஈறு – என்பனமுன்னிலை ஏவல் ஒருமை வினையாக வாரா. இவை ஏவல் வினையாக வரவேண்டுமாயின்,உயிரீறும் புள்ளியீறும் உகரம் பெற்று வரவேண்டும்; குற்றியலுகர ஈறுமுற்றியலுகர ஈறாகிவிடும்.எ-டு: கௌவு கொற்றா; உரிஞு கொற்றா, பொருநு கொற்றா, திருமுகொற்றா, தெவ்வு கொற்றா, கூட்டு கொற்றா – இவற்றுள் வருமொழி வல்லெழுத்துவிகற்பித்து மிகுதல் கொள்க.கூட்டு என்பது ஏவலொருமை முற்றாகியவழி முற்றியலுகர ஈற்றது.(தொ.எ.152 நச். உரை)குற்றியலுகரஈறு வருமொழி வல்லெழுத்து மிக்குக் கூடுக் கொற்றா எனவும்வரும் (இயல்பாதலே அன்றி). (153 இள.உரை)