முன்னிலை ஒருமை விகுதிகள் இ ஐ ஆய் – என்பன. இகரம் நீ என்றபெயரிலுள்ள ஈகாரத்தின் திரிபு. ஆய் என்பது ஐ என்பதன் நீண்ட வடிவே.ஐயன் என்ற பெயரின் முதனிலை ஐ. ஒளவை என்ற பெயரின் முதனிலை ஒள. கன்னடமொழி யில் ஆடூஉ முன்னிலைவினைகளில் ஐ-சேர்ந்து ‘கேள்வை’ என வரும்;மகடூஉ முன்னிலைவினைகளில் ஒள- சேர்ந்து ‘கேள் வெள’ என வரும். இவ்வாறேதமிழிலும் பண்டைக் காலத்தில் ஆடூஉ முன்னிலைவினைக்கண் ஐயும், மகடூஉமுன்னிலை வினைக்கண் ஒளவும் சேர்த்து வழங்கினர். பிற்காலத்துப்படர்க்கைக்கண்ணேயன்றி முன்னிலைக் கண்ணும் அஃறிணை வழக்கு வந்தமையால்அவ்வேறுபாடு வேண்டா என ஒழிக்கப்பட்டபோது, ஒள முன்னிலைக்கண் வருதல்நீக்கப்பட்டது.முன்னிலைப் பன்மைக்கண் செய்யும்- இரும்- என்பன போன்ற ஏவலில் காணும்உம்விகுதி பண்டைச் செய்யுளில் காணப்பட வில்லை. ‘உண்ம் என இரக்கும்’(புறநா. 178) ‘தின்ம் எனத் தருதலின்’ (150) – என மகர ஈற்று முன்னிலைச்சொல் வந்துள்ளன. இச்சொற்களை நோக்க, மகரமெய் பன்மையைக் குறிக்கிறது.செய்கும்- வருதும்- என்ற தன்மைப்பன்மை முற்றுப் போல, உண்ம்- தின்ம்-என்பன முன்னிலைப் பன்மை வினையைக் குறிக்கின்றன. செந்தமிழில் நீம்என்பதன்கண் உள்ள மகரத்தை விலக்கியதனால், வினைக்கண்ணும் உண்ம் என்பதுபோல மகர ஈறு வாராது விலக்கப்பட்டது. ஒளவும் மகரமும் தொல். காலத்துமுன்னரே விலக்கப்பட்டன.மொழியிறுதிக் குற்றியலுகரமும் முற்றியலுகரமாக ஒலிக்கும். அவ்வாறுஒலித்தல் முன்னிலைவினைக்கண்ணே என்பதும், ஆண்டுப் பொருள் வேறுபடும்என்பதும், நச்சினார்க்கினியர் காது கட்டு கத்து முருக்கு தெருட்டு -என முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நிற்கும் என்றுஇதனை விளக்கியுள்ளார் என்பதனை நோக்கக் குற்றிய லுகரத்து இறுதிமுன்னிலை வினைக்கண் வாராது என்பதும் பெறப்படும்.ஞகரம் ‘உரிஞ்’ எனத் தொழிற்பெயர் ஒன்றன்கண்ணும், நகரம் ‘வெரிந்’என்ற பெயர்ச்சொற்கண்ணும் ‘பொருந்’ என்ற தொழிற்பெயர் ஒன்றன்கண்ணும்வருமாதலின் அவை வினைக்கண் வாரா. “ஞ் ந்- முன்னிலை ஏவற்கண் வரும்;ஆண்டு அவை உகரம் பெறும்” என்று நன்னூலார் கூறியது போலத் தொல்.குறிப்பிடாமையால், ஞ ந-க்கள் தொழிற் பெயர்க்கண் அன்றி முன்னிலைவினைக்கண் வாரா.வகரம் அவ் இவ் உவ் – என்னும் சுட்டுக்களிலும், தெவ் என்னும்பெயர்ச்சொல்லிலுமன்றி வருதல் இன்மையின், அது முன்னிலை வினைக்கண்வாராது என விலக்கப்பட்டது.இவ்வாறு ஒள- ஞ் ந் ம் வ் – குற்றியலுகரம் – என்பன முன்னிலைவினைக்கண் வாரா என விலக்கப்பட்டன. (எ. ஆ. பக். 115, 116)