முன்னிலை மொழிக்கண் இறுதியில் வாராஎழுத்துக்கள்

ஒள என்ற உயிர், ஞ் ந் ம் வ் – என்ற மெய்கள், குற்றியலுகரம்- என்பனமுன்னிலை ஏவலொருமை வினைக்கண் தாமே ஈறாக வாரா. எனவே, ஒளவும், ஞ்ந் ம்வ் – என்னும் மெய்களும் உகரம் பெற்று முன்னிலை வினைக்கண் ஈறாக வரும்,குற்றியலுகரம் முற்றியலுகரமாக நீண்டு முன்னிலை வினைக்கண் ஈறாகவரும்.எ-டு: கௌவு கொற்றா, கௌவுக் கொற்றா; உரிஞு கொற்றா, உரிஞுக்கொற்றா; பொருநு கொற்றா, பொருநுக் கொற்றா; திருமு கொற்றா, திருமுக்கொற்றா; தெவ்வு கொற்றா, தெவ்வுக்கொற்றா; கூட்டு கொற்றா, கூட்டுக்கொற்றா – இவ்வீறுகள் ஆறும் உகரம் பெற்று வல்லினம் மிகாமலும் மிக்கும்உறழ்ந்தன. (தொ. எ. 152 நச்.)