இரண்டு வெவ்வேறு பொருள்களை உணர்த்தும் சொற் றொடர்கள், சொற்கள்புணருமிடத்து ஒரேவகையான எழுத்துக்களான் ஆகிய தொடர்களாய் வரிவடிவில்எழுதப் படுகையில், இத்தொடருக்கு இப்பொருள் என்று சொல்லு வான்குறிப்பானே அமையும் நிலையில், அவை ‘முன்னப் பொருள’ எனப்படும். அஃதாவதுவெளிப்படையாகத் திரிபு அறப் பொருளுணர்த்த இயலாதனவாய்ச் சொல்லுவான்குறிப்பானும் அத்தொடரை எடுத்தல் படுத்தல் ஓசைக் குறிப் பானுமேஉணரப்படுவன என்பது.செம்பொன் + பதின்தொடி, செம்பு + ஒன்பதின் தொடி இரண்டும்‘செம்பொன்பதின்றொடி’ என்றே அமைவன.செம்பு என்ற சொல்லை எடுத்து ஒலிப்பதனானும், செம் பொன் என்பதனைஎடுத்து ஒலிப்பதனானுமே இது பொருள் தெரிய உணரப்படும். மேலும் கூறுபவன்பேசுவது செம்பைப் பற்றியா, பொன்னைப் பற்றியா – என்பதனை உணர்ந்தாலும்தெளிவாகப் பொருள் புலப்படும். (தொ. எ. 142 நச். உரை)முன்னப்பொருள ஆவன – குறிப்பினான் பொருள் உணரப் படும் தொடர்கள்.