ஒன்பஃது – நிலைமொழி; பத்து, நூறு – வருமொழிநிலைமொழியாகிய எட்டின்மேல் ஒன்று, ஒன்பஃது – எனப் பஃது என்னும்இறுதியாய்த் திரிந்து நின்றாற் போல, வரு மொழியாகிய (எண்பதில் மேல்)பத்தை ‘நூறு’ எனவும், (எண்ணூற்றின் மேல்) நூற்றை ‘ஆயிரம்’ எனவும்திரித்து- என்பது பொருள். (முன்னதின் – முன்மொழி போல; இன்:ஐந்தனுருபு)ஒன்பஃதினாலே பத்தையும் நுற்றையும் பெருக்கி எனப் பொருள்கொள்வாருமுளர். ‘முரணி’ என்ற சொற்கு அது பொருளன்று ஆதலானும், அதுபொருளாமேனும் அதனால் வருமொழி இவ்வாறு திரிந்தது எனத் தோன்றாமையானும்,தோன்றின் நிலைமொழிக்கும் விகாரம் கூற வேண்டாமை யானும் அது பொருந்தாதுஎன்க. (நன். 194 சங்கர.)