முனையூர் என்பது இடவகனுக்கு உதயணன் கொடுத்த ஒரு நாட்டின் தலைநகர். அடவிநாடு ஐம்பதிலும் முன்னிடமாக அமைந்திருந்தமையால் முனையிடம் என்னும் பொருளில் முனையூர் எனப்பெயர் பெற்றிருக்கலாம். அல்லது முன்னதாகிய அதாவது தலையாய தாகிய தலைநகர் என்னும் பொருளில் முனையூர் என்றும் பெயர் பெற்றிருக்கலாம்.
“இடவகற்இருந்த முனையூருள்ளிட்
டடவி நன்னா டைம்பது கொடுத்து” (பெருங். 4 9:28 29)