எழுத்து – இரேகை, வரி, பொறி- என்பன (நுற்பாஎண்3)உயிர் – அச்சு, ஆவி, சுரம்,பூதம் – என்பன (7)குற்றெழுத்து – குறுமை, இரச்சுவம், குறில் – என்பன (9)நெட்டெழுத்து – நெடுமை, தீர்க்கம், நெடில் – என்பன (11)மெய் – ஊமை, உடல், ஒற்று, காத்திரம் – என்பன (13)வல்லெழுத்து – வன்மை, வன்கணம், வலி- என்பன (15)மெல்லெழுத்து – மென்மை, மென்கணம், மெலி- என்பன (17)இடையெழுத்து – இடைமை, இடைக்கணம், இடை-என்பன (19)சார்பு – புல்லல், சார்தல்,புணர்தல் என்பன (23)ஆய்தம் – அஃகேனம், தனிநிலை – என்பன (28)சுட்டு – காட்டல், குறித்தல் – என்பன (29)வினா – வினவல், கடாவல் – என்பன (30)அளபெடை – அளபு, புலுதம்- என்பன (33)இடைநிலை சங்கம், புணர்ச்சி, சையோகம், புல்லல்,மெய் மயக்கம் } கலத்தல், மயக்கம், இடைநிலை என்பன (66) மாத்திரை – மட்டு, அளவு,மிதம், வரை – என்பன (97)