முத்துவீரிய எழுத்தியலுள்காணப்படும் விசேடக் குறிப்புக்கள் சில

மெல்லெழுத்தின் பிறப்பிடம் தலை (எழுத். 43). எடுத்தலும் படுத்தலும்என ஓசை இருவகைத்து (59). நகரம் ‘பொருந்’ என ஒரு சொற்கண்ணேயே இறுதியாகவரும் (90). கைந்நொடி யாகிய மாத்திரை உன்னுகிற காலத்துக் கால்மாத்திரை, விரலை ஊன்றுகின்ற காலத்து அரை, விரல்களை முறுக்குகிறகாலத்து முக்கால், முறுக்கியவற்றை ஓசைப்பட விடுக்கிற காலத்து ஒன்று-என முறையே அமையுமாறு (98)- இன்னோரன்ன செய்திகள் பிற இலக்கண நூலில்காணப்படாவாய் இந் நூற்கே விசேடமான குறிப்புக்களாம்.