இந்நூல் எழுத்ததிகாரம் எழுத்தியல், மொழியியல், புணரியல்- என்றமூன்று இயல்களையுடையது. அதிகாரத் தற்சிறப்புப் பாயிரம் நீங்கலாகஇவற்றில் முறையே 115, 45, 298 ஆக 458 நூற்பாக்கள் உள. எழுத்தியலில்நன்னூலின் எழுத்தியற் செய்தி சுருக்கியும் விரித்தும்கூறப்பட்டுள்ளது. எழுத்து, உயிர்மெய், மயக்கம்- முதலியவற்றின்பரியாயப் பெயர்கள் கூறப்பட் டுள்ளன. அளபெடை எட்டுவகைப்படும் எனக்கணக்கிடப் பட்டுள்ளது. மொழியியலின் தொடக்கத்தில் ஓரெழுத்தொரு மொழிகள்,பெயர் வினை என்ற பகுப்பு, மொழி எழு வகைப்படும் என்ற பிறர்கூற்று -என்பன குறிப்பிடப்பட்டுள. வடமொழி எழுத்துக்கள் தமிழில் திரிந்துவழங்குமாறும் வடமொழித் தீர்க்க குண விருத்தி சந்திகளும், வடசொற்கள்தமிழில் திரிந்து வழங்குமாறும் விரித்துப் பேசப்பட்டுள. புணரியலில்,பொதுப் புணர்ச்சி – உருபு புணர்ச்சி – உயிரீறு மெய்யீறுகுற்றியலுகரஈறு ஆகியவற்றின் புணர்ச்சி- யாவும் நன்னூலையும்தொல்காப்பியத்தையும் ஒட்டிக் கூறப்பட்டுள. கோ-மா- என்பன யகரஉடம்படுமெய் பெறுதல், எண்ணுப் பெயர்கள் உருபேற்குமிடத்து இன்சாரியைபெறுதல், ழகரம் தகரம் வருவழி டகர மாதல், ழகரமானது நகரம் வருவழிணகரமாதல் – முதலியன புதியன புகுதலாக இப்புணரியலுள் இடம் பெற்றுள.