19ஆம் நுற்றாண்டில் முத்துவீர உபாத்தியாயர் என்பவரால்,தொல்காப்பியம் நன்னூல் முதலியவற்றில் அரியவாகக் கூறப் பட்டுள்ளசெய்திகளை எளிமைப்படுத்திக் கூறுவதற்காக இயற்றப்பட்ட ஐந்திலக்கண நுல்முத்துவீரியம். இஃது எழுத்து சொல் பொருள் யாப்பு அணி – என்னும்ஐம்பிரிவுகளை யுடையது. அவற்றுள் எழுத்ததிகாரம், எழுத்தியல் மொழி யியல்புணரியல் – என்னும் முப்பகுப்பினது. சொல்லதிகாரம், பெயரியல் வினையியல்ஒழிபியல்- என்னும் முப்பிரிவிற்று. பொருளதிகாரம், அகவொழுக்க இயல்களவொழுக்க இயல் கற்பொழுக்க இயல் – என்னும் முப்பாலது. யாப்பதிகாரம்,உறுப்பியல் செய்யுளியல் ஒழிபியல் என்ற மூவியலினது. இனி எஞ்சியஅணியதிகாரம், சொல்லணியியல் பொருளணியியல் செய்யுளணியியல் – என்ற மூன்றுஇயல்களான் இயன்றது. இந்நூற்கு உரை வரைந்தவர் திருநெல்வேலித்திருப்பாற்கடல் நாதன் கவிராயர் என்று கருதுகிறோம். ஐந்து அதிகாரங்களிலும் முறையே 458, 310, 92, 266, 159, ஆக 1285 நுற்பாக்கள் உள்ளன.ஐந்து அதிகாரங்களிலும் உள்ள தற்சிறப்புப் பாயிர நுற்பாக்களையும் கூட்ட1290நுற்பாக்களாம்.