முத்துவீரியம் சுட்டும் ‘பேசுங்கிளவி’

‘பேசுங் கிளவி’ யாகிய வழங்கும் சொல் சங்கதம், பாகதம், சனுக்கிரகம்,அவப்பிரஞ்சனம் – என நால்வகைப்படும். இந் நான்கனுள், சங்கதமும்சனுக்கிரகமும் தேவர்மொழி யாகும். அவப்பிரஞ்சனம் என்பது இழிந்தோரதுமொழி. ஏனைய பாகதம் என்பது நாடுகளெல்லாம் வழங்கும் மொழி.பாகதம் தற்பவம் எனவும், தற்சமம் எனவும், தேசிகம் எனவும்மூவகைப்படும். ஆரியச் சிறப்பெழுத்தானும், பொதுவும் சிறப்புமாகியஇரண்டெழுத்தானும் தமிழில் சிதைந்து வருவது தற்பவமாம். எ-டு : சுகி,போகி; அரன், அரி.ஆரியத்திற்கும் தமிழிற்கும் பொதுவெழுத்தாலாகிய மொழி தற்சமமாம்.எ-டு : அமலம், காரணம், கமலம்.தேசிகம் என்பது திசைச்சொல் ஆகும். எ-டு: தாயைத் தள்ளை என்றுவழங்குவதும், தந்தையை அச்சன் என்று வழங்குவதும் காண்க. (மொழி.26-33)