முத்துவீரியம், தீர்க்கசந்தி குணசந்தி விருத்திசந்தி- ஆகிய மூவகைவடமொழிச் சந்திகளைக் குறிக்கிறது. நிலைமொழி யும் வருமொழியும்வடசொல்லாக அமையுமிடத்தே இவை நிகழ்கின்றன.அ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலிலும் அ ஆவருமாயின், ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட,இடையில்ஓர் ஆகாரம்தோன்றும்.எ-டு :பத + அம்புயம் = பதாம்புயம்; சேநா + அதிபதி =சேநாதிபதிஆ) நிலைமொழியீற்றில் இ ஈ நிற்க வருமொழி முதலிலும் இ ஈவருமாயின், ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையில் ஓர் ஈகாரம்தோன்றும்,எ-டு : மகி + இந்திரன் = மகீந்திரன்; புரீ + ஈசன்= புரீசன்.இ) நிலைமொழியீற்றில் உ ஊ நிற்க, வருமொழி முதலிலும் உஊவருமாயின், ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையில் ஓர் ஊகாரம்தோன்றும்.எ-டு: குரு + உதயம் = குரூதயம்; சுயம்பூ + ஊர்ச்சிதம் =சுயம்பூர்ச்சிதம்.இவை மூன்றும் தீர்க்க சந்தியாம்.அ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலில் இ ஈ வருமாயின்,ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையே ஓர் ஏகாரம்தோன்றும்.எ-டு: நர + இந்திரன் = நரேந்திரன்; உமா + ஈசன் = உமேசன்ஆ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலில் உ ஊ வருமாயின்,ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையே ஓர் ஓகாரம்தோன்றும்.எ-டு: தாம + உதரன் = தாமோதரன்; கங்கா+ ஊர்மி =கங்கோர்மி.இவை இரண்டும் குணசந்தியாம்.அ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலில் ஏ ஐ வருமாயின்,ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையே ஓர் ஐகாரம்தோன்றும்.எ-டு: சிவ + ஏகநாதன் = சிவைகநாதன்; மகா + ஐசுவரியம் = மகைசுவரியம்.ஆ) நிலைமொழியீற்றில் அ ஆ நிற்க வருமொழி முதலில் ஓ ஒள வருமாயின்,ஈறும் முதலும் ஆகிய அவ்விரண்டும் கெட, இடையே ஓர் ஒளகாரம்தோன்றும்.எ-டு : கலச + ஓதனம் = கலசௌதனம்; மகா + ஒளடதம் = மகௌடதம். (மொழி.34-41)இவை இரண்டும் விருத்திசந்தியாம்.