மொழி ஓரெழுத்து முதலாக ஒன்பது எழுத்து இறுதியாகத் தொடர்ந்து வரும்.(பகுபதம், பகாப்பதம் – என நன்னூல் பதத்தைப் பாகுபடுத்தியமை போல மு.வீ.பாகுபடுத்திலது-)எ-டு: கா, அணி, அறம், அகலம், அருப்பம், அம்பலவன், அரங்கத்தான்,உத்தராடத்தான், உத்தரட்டாதி யான் – என முறையே காண்க. (மொழி. 9)