முத்துவீரியம் சுட்டும்வடமொழியாக்கம்

ஆரிய உயிரெழுத்துப் பதினாறனுள் நடுவில் நிற்கும் நான்கும்இறுதியில் நிற்கும் இரண்டும் அல்லாத ஏனைய பன்னிரண்டும், ஆரியமெய்யெழுத்து முப்பத்தேழனுள் ககரம் முதல் ஐந்து வருக்கங்களின் முதலில்நிற்கும் க ச ட த ப – என்பனவும் அவற்றின் இறுதியில் நிற்கும் ங ஞ ண நம – என்பனவும் ய ர ல வ ள – என்பனவும் ஆகிய பதினைந்தும் ஆரியம் தமிழ்என்னும் இருமொழிக்கும் பொதுவெழுத்துக்களாம். இனி, ஆரியத் திற்கேசிறப்பான எழுத்துள், மேறகூறியவாறு இடை யிலும் இறுதியிலும் நிற்கும்உயிர் ஆறும், பொது நீங்கலாக எஞ்சிய மெய் இருபத்திரண்டும் இடம்பெறும்.ஆரியத்திற்குரிய சிறப்பெழுத்துக்கள் தமிழில் வடசொல்லாகு மிடத்தேதிரியப் பெறும். அவை திரியுமாறு:8ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில் ச எனவும் இடையில் ய எனவும்திரியும். 30ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில் ச எனவும் இடையில் யஎனவும் திரியும். 31ஆம் மெய் யெழுத்து, சொல் முதலில் ச எனவும் இடையில்ட எனவும் திரியும். 32ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில் ச எனவும்இடையில் த எனவும் திரியும். 33ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில் அஎனவும் இடையில் க எனவும் திரியும். 35ஆம் மெய்யெழுத்து, சொல் முதலில்க எனவும் இடையில் க்க் எனவும் திரியும். (மொழி. 11 – 20)ஆகார இறுதிப் பெயர் ஐகாரமாகவும், ஈகார இறுதிப்பெயர் இகரமாகவும்திரியப் பெறும். எ-டு : மாலா- மாலை; புரீ – புரி.பிறவும் நன்னூலாரைப் பின்பற்றியே மொழிந்துள்ளவாறு காண்க. (மொழி.23-26)தத்திதம் பற்றிய குறிப்பு ‘முத்துவீரியம் சுட்டும் தத்திதம்’என்பதன்கண் காண்க.