தழாத் தொடர்களை ‘மயங்கியல் மொழி’ என்று குறிக்கும் மு.வீ.தொல்காப்பிய நூற்பாவை ஒட்டியது. அவையும் நிலை வருமொழிகளாக நின்றுபுணர்தற்குரியன.எ-டு: தெய்வ மால் வரை’ (‘மால் தெய்வ வரை’ என்க.)(5)ஆ,மா,கோ- என்று பெயர்கள் இன்சாரியை பெறுதலுமாம்.எ-டு : ஆவினை, மாவினை, கோவினை (16)கோ,மா, இவற்றின் முன் யகர உடம்படுமெய் வருதலுமாம்.வருமாறு: கோயில், மாயிரு ஞாலம் (25)எண்கள் எல்லாம் இன்சாரியை பெறும்.எ-டு : ஒன்றினை, நான்கினை (69)நிலா என்னும் பெயர் இன்சாரியை பெறும். (தொல். கூறுவது வேறு. 228நச்.) வருமாறு.: நிலாவின் காந்தி (93)இரா என்னும் பெயர்க்கு இன்சாரியை இல்லை (தொல். கூறுவது வேறு. 227.நச்.) (94)ழகரம் வேற்றுமைக்கண் தகர நகரங்கள் வருமிடத்தே, முறையே டகர ணகரமாகத்திரியும். (இப்புணர்ப்பு வீரசோழியத்துள் கண்டது)எ-டு :கீழ்+ திசை = கீட்டிசை; சோழ + நாடு = சோணாடு (210,211)