பிள்ளைத் தமிழாகிய பிரபந்தத்துள் ஐந்தாவது பருவம்;குழந்தையைத் தனக்கு முத்தம் தருமாறு தாய் கேட்ப அமைத்துப் பாடுவது.செங்கீரை போன்ற பிற பருவம் போல, இதன்கண்ணும் பத்துப் பாடல்கள் வரும்.‘கனிவாய் முத்தம் தருகவே’ போன்ற வாய்பாட்டால் பாடல் முடியும்.