முதல், வழி, சார்பு: விளக்கம்

முதனூலுக்கு வழிநூலும் சார்புநூலும் ஒருவற்கு மைந்தனும் மருமானும்போலும் என்க. ஒரு நூல் தனக்கு வழிநூலை நோக்கின் முதனூலாகவும், முதனூலைநோக்கின் வழிநூலாக வும், அயல்நூலை நோக்கச் சார்புநூலாகவும் நிற்கும்.எனவே, முதனூல் மாத்திரையாய் நிற்பது இறைவன்நூலும், வழிநூல்மாத்திரையாய் நிற்பது இறுதி நூலும் அன்றி, இடைநிற்கும் நூல்கள்எல்லாம் ஒருவற்கு மைந்தனாயினான் மற்றவற்குத் தந்தை ஆயினாற்போல,முதனூலாயும் வழிநூலாயும் நிற்கும். (நன். 8 சங்கர.)