எ-டு : ‘காம ரம்பயில் நீர மதுகரம்காம ரம்பயில் நீர மதுகரம்காம ரம்பயில் நீர மதுகரம்நாம ரந்தை உறநினை யார்நமர்.’கா மரம் பயில் நீர மதுகரம், காமரம் பயில் நீர; மது கரம் காமர்அம்பு அயில் நீர; மது கரம் நாம் அரந்தை உற நமர் நினையார் – என்றுபிரித்துப் பொருள் செய்யப்படும்.“சோலைகளிலுள்ள மரங்களில் நெருங்கிய வண்டுகள், காமரம் என்றபண்ணினைப் பாடும் நீர்மையுடையன. தேனைக் கொண்ட மன்மதனாருடைய அம்புகள்வேல் போன்று கூரியவாக உள்ளன. வேனிற்காலம் எதிர்ப்படவும் நாம்துன்புறுதலை நம்தலைவர் நினைக்கவில்லையே!” இப்பாடல், பிரிந்த தலைவிவேனிற்காலத்து வருந்துவதாக நிகழ்கிறது. இதன்கண், முதல் மூவடிகளும்மடக்கியவாறு . (மூன்றாமடிக்கண், மது – வேனிற் பருவம்; கரம் -எதிர்ப்படுதல்.) (தண்டி. 96 உரை.)