முதல் சீருக்கு ஒரு தனி இலக்கணம்

பாடப்படும் தலைமகனது பெயர்நாள் தொடங்கி எட்டாம் இராசிக்கண் உற்றஇரண்டே கால் நாளும், எண்பத்தெட் டாம் கால் பொருந்திய வைநாசிக நாளும்தள்ளிப் பொருத்த முடைய நாள்களைக் கொண்டு தலைவன் பெயர்க்கு முதற்சீர்எடுத்துக் கூறுதல் மரபு.இனிக் கணநாள்களில் விலக்கியன ஒழித்தே பொருத்த முடைய நாள்களேகொள்ளப்படும் என்பதும் உரையிற் கொள்ளப்படும். விளக்கம் வருமாறு :பாட்டுடைத் தலைவன் இராமன் என்க. அவன் பெயர் நாள் கார்த்திகை;அதற்குரிய இராசி இடபம்; அதனுடைய எட்டாம் இராசி தனு; அதற்குரிய நாள்கள்மூலம், பூராடம், உத்தராடம் முதற்கால்; அவற்றுக்குரிய எழுத்துக்கள்யூயோ – மூலம்; உ ஊ எ ஏ ஐ – பூராடம் ; ஓ உத்தராடம் முதல் கால்;இவ்வெழுத்துக்களால் முதல்சீர் முதலெழுத்து அமைதல் கூடாது என்பது.இனி, விநாசத்தை (-அழிவினை) த் தரும் வைநாசிகம் இயற் பெயருக்குரியநாளாகிய கார்த்திகைக்கு இருபத்திரண்டாம் நாளாகிய சதயத்தின் நான்காம்கால்; அதற்குரிய எழுத்து தொ என்பது. இதனானும் பாட்டின் முதற்சீர்முதலெழுத்து அமைதல் கூடாது என்பது.இனி, கணநாளில் விலக்கியன தீக்கணம் அந்தரகணம், சூரியக ணம்,மாருதகணம் என்பன; தீக்கணம் – கார்த்திகை; அந்தரகணம் – புனர்பூசம்;சூரிய கணம் – பூசம் ; வாயு கணம் – சுவாதி. இவற்றுக்குரிய எழுத்துக்கள்முறையே அ ஆ இ ஈ என்பனவும் ஆம். இவையும் புகுதல் கூடாது என்பது. (இ.வி. பாட். 37)