முதல், சார்பு: தொகை வகை விரி

முதலெழுத்திற்கு ‘முதல்’ என்றது தொகையாகவும், ‘உயிரும் உடம்பும்’என்றது வகையாகவும், ‘முப்பது’ என்றதுவிரியாக வும்; சார்பெழுத்திற்குச்‘சார்பு’ என்றது தொகையாகவும். ‘பத்தும்’ என்றது வகையாகவும், ‘ஒன்றொழிமுந்நூற்றெழு பான்’ என்றது விரியாகவும்;இவ்விருதிறத்து எழுத்திற்கும் ‘எழுத்து’ என்றது தொகை யாகவும்,‘முதல்சார்பு’ என்றது வகையாகவும், இவ்விரு திறத்து எழுத்தின் விரியும்கூட்டி ‘ஒன்றொழி நானூறு’ என்பது விரியாகவும் கொள்க. (நன். 61.இராமா.)