மொழி தோன்றுதற்குக் காரணமான அடிப்படை எழுத்துக் களாகிய உயிர்பன்னிரண்டும் மெய் பதினெட்டுமாகிய முப்பது எழுத்துக்கள் முதலெழுத்துஎனப்படும். இனி, ஒருசொல்லின் முதலில் வரும் எழுத்து முதலெழுத்துஎனவும், முதனிலை எனவும் கூறப்படும்.எ-டு : ‘சுட்டுமுதல் ஆகிய இகர இறுதி’ – அதோளி (தொ.எ.159 நச்.)‘எகர முதல் வினாவின் இகர இறுதி’ -எதோளி (எ. 159)‘சுட்டு முதல் உகரம்’ – அது (எ . 176)‘சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி’ – அவை (எ. 177)‘சுட்டு முதல் வகரம்’ – அவ் (எ . 183)‘மூன்றன் முதனிலை நீடலும் உரித்தே’ – மூவுழக்கு (எ . 457)‘ஆறுஎன் கிளவி முதல் நீ டும்மே’ – ஆறகல் (எ . 458)‘அகம் என் கிளவிக்கு… முதல்நிலை ஒழிய’ – அங்கை (எ. 315)