முதல் ஈரெண்ணின்முன் உயிர்வருங்கால் புணர்ச்சி

ஒன்று இரண்டு- என்பனவற்றின் முன் உயிர்முதல் மொழி வரின், ஒன்றுஇரண்டு- என்பன ஒரு இரு- எனத் திரிந்து நின்ற நிலையில் உகரம் கெட, ஒர்இர் – என்றாகி, முதல் நீண்டு ஓர் ஈர் எனத் திரிந்து வருமொழியொடுபுணரும்.எ-டு: ஒன்று + அகல் = ஓரகல், ஒன்று + உழக்கு = ஓருழக்கு: இரண்டு+அகல்= ஈரகல், இரண்டு+ உழக்கு= ஈருழக்கு (தொ.எ.455நச்.)