முதலடிக்கண் முதற்சீர் மடக்கி வருதல் போலவே, இரண் டாம் அடிக்கண்வந்த முதற்சீரும் மடக்கி வர அமைவது.எ-டு : ‘நினையா நினையா நிறைபோய் அகலவினையா வினையா மிலமால் – அனையாள்குரஆளும் கூந்தல் குமுதவாய்க் கொம்பின்புரவாள்! நீ பிரிந்த போது’“குரவம்பூச் சூடிய கூந்தலையும், குமுதம் போன்ற வாயையும் உடையகொம்பனைய தலைவியைப் பாதுகாக்கும் தொழிலைப் பூண்ட தலைவனே! நீபிரிந்தபோது நின்னை யாம் நினைத்து, எங்களது நிறை என்ற பண்பு எங்களைவிட்டு நீங்க வருந்தி எச்செயலும் யாம் செய்யும் ஆற்றல்இலேமாவேம்.”‘நி(ன்)னை யாம் நினையா, நிறை போய் அகலஇனையா வினையாம் இலமால்’ எனப் பிரிக்கநினையா நினையாவினையா வினையா முதலீரடி ஆதிமடக்கு . (தண்டி.95)