திரை நுரை அலை தளிர் – என்றாற் போல்வன வினைமுதற் பொருண்மையுணர்த்தும் இகரவிகுதி புணர்ந்து கெட்டு, முதனிலை மாத்திரையாய் நின்றுவினைப்பெயர் ஆதல் பற்றி, முதனிலை வினைப்பெயர்- முதனிலைத் தொழிற்பெயர்- என்று கூறப்பெறும். (சூ.வி.பக். 33)