உயிரும் இடையின மெய்யும் மிடறும், மெல்லினமெய் மூக்கும், வல்லினம்மார்பும் இடமாகக் கொண்டு பிறக்கும். இஃது இடப் பிறப்பு.முயற்சிப்பிறப்பு வருமாறு:அ, ஆ – அங்காத்தலானும், இ, ஈ, எ, ஏ, ஐ – அங்காப்பொடு,மேல்வாய்ப்பல்அடியை நாவிளிம்பு உறுதலானும், உ., ஊ, ஒ, ஓ, ஒள -அங்காப்போடு, இதழ் குவிதலானும் பிறக்கும். (அங்காப்பினைப்பிறவற்றுக்கும் கொள்க.)க், ங் – நாவின்அடி மேல்வாயடியை உறுதலானும், ச்,ஞ் – நாவின் நடுமேல்வாய்நடுவை உறுதலானும், ட், ண் – நாவின் நுனி மேல்வாய்நுனியைஉறுதலானும், த், ந் – முன்வாய்ப்பல் அடியை நாநுனி உறுதலானும், ப், ம்- கீழ்மேல் உதடுகள் உறுதலானும், ய் – நாவின்அடி மேல்வாயின் அடியைநன்றாக உறுதலானும், ர், ழ் – நாவின் நுனி மேல்வாயை வருடுதலானும், ல் -முன்வாய்ப்பல் அடியை நாவிளிம்பு வீங்கி ஒற்றுதலானும், ள் – மேல்வாயைநாவிளிம்பு வீங்கி வருடுதலானும், வ் – கீழுதடு மேற்பல்லை உறுதலானும்,ற், ன் – மேல்வாயை நாவின் நுனி மிக உறுதலானும் பிறக்கும்.(உறுதல் – பொருந்துதல்; வருடுதல் – தடவுதல்; ஒற்றுதல் – தட்டுதல்)(நன். 75 – 86)