முதலீரடி மடக்கு

எ-டு : “விரைமேவு மதமாய விடர்கூடு கடுநாகவிரைமேவு மதமாய விடர்கூடு கடுநாகம்விரைமேவும் நெறியூடு தனிவாரல் மலைவாண!நிரை மேவும் வளை சோர இவளாவி நிலைசோரும்.“விரை மேவு மதம் ஆய இடர் கூடு கடு நாகங்களை இரை மேவும் மதம் ஆயவிடர் கூடும் கடு நாகம் விரை(தல்) மேவும் நெறி – என்று பிரித்துப்பொருள் செய்யப்படும்.’“மலைநாட! நறுமணம் கமழும் மதநீரையுடைய துன்பம் உறும் கொடிய யானைகளைஇரையாக விரும்பும் வலிய குகைகளில் தங்கும் கடிய பாந்தள்கள்விரைதலுறுகின்ற மலைவழியிலே தனியே வாராதே. வரிசையாக அணிந்த வளையல்கள்சோர இவள் உயிர் வாடுவாள்” எனத் தோழி தலைவனை ஏதம் கூறி இரவு வருதலைவிலக்கிய இப்பாட லில், முதல் இரண்டடியும் மடக்கியவாறு. (தண்டி. 96உரை)