எ-டு : ‘பணிபவ நந்தன தாக மன்னுவார்பணிபவ நந்தன தாக மன்னுவார்அணியென மேயது மன்ப ராகமேஅணியென மேயது மன்ப ராகமே.’பணி பவனம் தனது ஆகம் மன்னுவார், பணி (- கீழான) பவம் (-பிறப்பு)நந்து (-இறப்பு) அந் அது ஆக (-இல்லையாக) மன்னுவார்; அன்பர் ஆகம், மன்பராகம் – எனப் பிரித்துப் பொருள் செய்யப்படும்.பாம்புகளுக்கு இருப்பிடமாகத் தமது மார்பைக் கொடுப்பவர்; கீழானபிறப்புஇறப்புக்கள் இன்றி நிலைபெற்றிருப்பவர்; அழகு என்றுபொருந்தியதும் அன்பர் இதயமே; அலங்காரம் என்று தரித்துக்கொள்வதும்நிலைபெற்ற திருநீறே (பராகம் – பொடி) என்று பொருள்படும் இப்பாடலில்,முதலீரடியும் கடையீரடியும் மடக்கியவாறு. (தண்டி. 96 உரை.)